Tuesday, January 19, 2010

டீலா நோ டீலா - பார்ட் - 2

அந்த கோகிலா மேட்டர் என்னன்னா , ஒரு சின்ன இல்லைல்ல பெரிய பிளாஷ்பேக்...............


நாங்க நாலாவது படிக்கும்போது அவ ஸ்கூல சேந்தா. பூ படத்துல வர ஸ்கூல் மாதிரி
எல்லாரும் அரக்கால் டவுசரும் பரட்ட தலையுமா இருக்கும்போது அவ அன்னைக்கு பூத்த 
ரோஜா மாதிரி தினமும் வருவா . அவ பின்னாடி யாரு உட்கார்ரதுன்னு எங்களுக்குள்ள சண்ட நடக்கும்னா பாத்துகங்க. ஏன் எதுக்குனு புரியாம அவள இம்ப்ரெஸ் பண்ண நாங்க பலகை தொடைகுறது , கிளாஸ் கிளீன் பண்றது , தண்ணி புடிச்சு வக்குறது இன்னும் என்ன என்ன வீணாப்போன வேல இருக்குதோ அத்தனையும் பண்ணோம் . ஆனா அவ எதையும் கண்டுக்கற மாதிரி தெரியல , யாரு கூடயும் பேசவும் இல்ல ........


காலாண்டு பரீட்சை முடிஞ்சதும் ஒரு நம்ம கதையில ஒரு ட்விஸ்ட் ...ரிசல்ட் பேப்பர் வந்த பின்னாடிதான் தெரிஞ்சது பொண்ணு நம்மள மாதிரி இல்ல டம்மி பீசுனு...அது வாங்குன ரேங்க் முப்பத்தி அஞ்சுக்கும் மேல ஏன்னா கிளாஸ்ல மொத்தமா அவ்ளோபேருதான்..


நானும் என் நண்பனும் படிக்குற பசங்களா இருந்ததனால பிட்டு போடுறதுக்கு கொஞ்சம் ஈசியா இருந்தது . அதுல என்ன சோகம்னா சூப்பரா இருந்த என் நண்பன விட்டுட்டு ரொம்ப சுமாரா இருந்த எனக்கு பிக்கப்பு ஆயுடிச்சு ( ஏதோ கருகுற ஸ்மெல் வருது )...........


  அப்புறம் என்ன  லாலாலா லாலா லல்லால்லத்தான் ...அதாங்க விக்ரமன் எபக்டு .
என் நண்பனும் என்னனென்னமோ பண்ணாலும் அவ பெவிகால் போட்டு ஓட்டுன மாதிரி நம்மகிட்ட இருந்து பிரியலன்ன பாத்துக்குங்க . கடசில அவன் அண்ணாமல படம் மாதிரி உன்ன விட நல்லா 
படிச்சி பர்ஸ்ட் ரேங்க் வாங்கி அவ கூட நான் ப்ரென்ட் ஆவல நான் உன் ப்ரென்ட் இல்லடா அப்படின்னு சபதம் போட்டு பிரிஞ்சுட்டான் .(எங்கேயோ லாஜிக் இடிக்குது இல்ல , இடிச்சா கொஞ்சம் தள்ளி நில்லுங்க ) 


கடைசில அவன் சபதத்துல பாதிதான் ஜயிச்சான் அதாவது அவன் நல்லா படிச்சு பர்ஸ்ட் ரேங்க் வாங்குனான் ஆனா அந்த பொண்ணு பாதில வந்த மாதிரி பாதியில போயிட்டா.  அட வேற ஸ்கூல் போயிட்டாங்க .  ஆனா என் நண்பன் மட்டும் அபோத்துல இருந்து எனக்கு எதிரி ஆயிட்டான் .  அப்புறம் அஞ்சாப்பு முடுஞ்சு நாங்களும் வேறவேற ஸ்கூல் மாறிட்டோம் .


அப்புறம் பதினர்று வருஷம் கழிச்சு நடந்தது தாங்க பார்ட் 1............................


இப்ப கிளைமாக்சு ,  டேய் நீ இவ்வளவு நேரம் பேசுனதுல எனக்கு கோகிலா மேட்டர்  மட்டும் நல்லா ஞாபகம் வருதுடா அதுனால தான் கேட்டேன் அப்படினேன் , அவனோ மறுபடியும் பேச்சை மாத்தி வேலை, வீட்ல எப்படின்னு  ஏதோதோ பேசுரான தவிர அதுக்கு பதில் சொல்லல.
 .
நமக்கோ மண்டயுல கொசுவர்த்தி சுத்திசுத்தி பழசெல்லாம் ஞாபகம் வந்து மீண்டும் கோகிலா அப்படின்னு இன்னொரு போஸ்ட் போடுற அளவுக்கு அவன்கிட்ட பேச ஆரம்பிச்சுட்டன். இப்ப தலைய ஆட்டுறது அவன்.  பயபுள்ள எல்லாத்தையும் கேட்டுட்டு கடைசில சொன்னான்பாருங்க ஒரு பதில் இப்ப நான் ஆப் .....அது என்னன்னா .........


கமல் நான் உன்கிட்ட போட்ட டீல்ல அப்ப பாதிதண்ட ஜ்யிச்சேன் ஆனா இப்ப முழுசும் ஜ்யிசுட்டண்டா அப்படினான் .
 நம்ம மரமண்டைக்கு அப்பவும் ஒன்னும் புரியல .........அது அவனுக்கும் தெரிஞ்சுடிச்சு


''அது வந்து நான் கோகிலாவ கல்யாணம் பண்ணிகிட்டேன்டா'' அப்படினான் .

நாமளோ இஞ்சி தின்ன கொரங்காட்டம் திரு திருன்னு முழிச்சிகிட்டு இருந்தேன் .


அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு அவன் '' சரிடா நான் கெளம்பறேன் நீ ப்ரீயா இருந்த வீட்டுக்கு வா அப்படின்னு சொல்லிட்டு ஞாபகமா அட்ரஸ்ஸ கொடுக்காம கெளம்பி போயிட்டான் ....


இப்ப நீங்க சொல்லுங்க என் டீலுல அவன் ஜயிச்சுட்டான்,  அவன் போட்ட டீலுக்கு நான் என்ன சொல்லுறது ............
                                          டீலா   நோ டீலா No comments:

Post a Comment