Sunday, January 17, 2010

டீலா - நோ டீலா


மொதல்ல அண்ணன் சங்கருக்கு
ஒரு மசால் தோசை பார்சல்
வித் வடையோட.
வின்னர் காமெடி மாதிரி தெரியுது.
என்னைய வச்சி காமெடி கீமெடி...........


சரி விஷயத்திற்கு வருவோம். ஒரு பத்து நாளைக்கு முன்னாடி பழைய நண்பன
பார்த்தேன். சாரி அவன்தான் என்ன பார்த்தான் . ஏன்னா எனக்கு அவன அடயாளம் தெரியல. அவளோ பழைய நண்பன். ஒன்னப்பு இருந்து அஞ்சாப்பு வரைக்கும் ஒன்ன படிச்சோம்.( இன்னைக்கு வரைக்கும் அவளோதான் படிச்சிருக்கோம் அது கம்பெனி ரகசியம் ..........அய்யய்யோ வெளில சொல்லிடேனா)

நானோ கஜினி அமீர் மாதிரி (பில்டுப்பு) எல்லாத்தையும் மறந்து போயிருக்க அவனோ முன்ஜென்ம நினவு வந்த சந்திரமுகி மாதிரி பொளந்து கட்றான்.
நானோ எல்லாத்துக்கும் இருக்குற ( 4 இல்ல 8 ஆ) எல்லாத்திசையிலும் தலைய
ஆட்டிட்டு இருந்தேன். அப்புறம் கடைசியா ஒரு கேள்வி தாங்க அவன கேட்டேன்
'' நம்ம கோகிலாவ இப்ப எங்கடா இருக்கா'' அப்படின்னு பையன் ஆப் ஆயிட்டான்.

அப்புறம் மெதுவா பேசுனான் . நீ இன்னும் அவள மறக்களியாட
அடப்பாவி நான் சும்மாதான் தாண்ட கேட்டேன் . நான் என்னமோ அவள லவ் பண்ணி தோத்து போன மாதிரி நீ பீல் பண்ற - இது நான்.

அந்த கோகிலா மேட்டர் என்னன்னா .........டாய் போதும் நிறுத்து நீ சொல்ற
மேட்டர் க்கும் போஸ்ட் தலைப்புக்கும் என்னடா சம்பந்தம் - இது நீங்க .

ஓகே பாஸ் நான் வழக்கம் போல .............. ஆயிட்டேன் ( அதாம்பா என் பேரு )

எப்படியாவது அடுத்த போஸ்ட்ல ரெண்டையும் மிக்ஸ் பண்றேன் .

வெயிட் ப்ளீஸ் அப்படின்னு சொல்லமாட்டேன் . அதுக்குள்ளே வேற வேல இருந்த பாருங்க ஓகே.


வழக்கம்போல டைம் இருந்தா என்னையும் கொஞ்சம் பாருங்க.
முடிஞ்ச வரைக்கும் குத்துங்க எசமான் குத்துங்க உங்க கமெண்ட

2 comments:

சங்கர் said...

வடையும் தோசையும் மட்டும் கொடுத்தா, சட்னி, சாம்பார் யாரு தருவாங்க?

சங்கர் said...

வேர்டு வெரிபிகேஷனை எடுத்துடுங்க,

தமிழிஷ், தமிழ்மணத்தில் இணைக்கலையா?

Post a Comment